'மாவீரர்கள்' பயங்கரவாதிகள். நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள்

"தமிழர்கள் கூறும் 'மாவீரர்கள்' பயங்கரவாதிகள். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது. எனவே, வடக்கு, கிழக்கில் நேற்று பயங்கரவாதிகளை நினைவேந்திய அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள்."

- இவ்வாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் ஆகியோரின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. துயிலும் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவீரர்கள் நினைவாக மக்கள் ஈகைச்சுடரேற்றினார்கள். இந்தநிலையிலேயே அரசு மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

"தமிழர்கள் கூறும் 'மாவீரர்கள்' பயங்கரவாதிகள். அவர்கள் இந்த நாட்டை அழித்தவர்கள்; பலரைக் கொலைசெய்தவர்கள்.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவர்களை நினைவுகூரவே முடியாது. பயங்கரவாதிகளை நினைவேந்த எமது அரசும் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை.

எனவே, வடக்கு, கிழக்கில் நேற்று பயங்கரவாதிகளை நினைவேந்திய அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்" - என்றார்.

'மாவீரர்கள்' பயங்கரவாதிகள். நினைவேந்திய அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள்

எஸ் தில்லைநாதன்

To find a suitable and affordable prices to enjoy your holidays CLICK HERE now.* *Holiday Bookings

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More