
posted 5th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் வெகுசிறப்பாக நேற்று (04) நடந்தேறியது.
நேற்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்துக்கு விசேட பூசைகள் நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூசைகள் நடைபெற்று சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றன.
வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக் கரையில் எழுந்தருளி அங்கு சிறப்புப் பூசைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதன்போது தந்தையை இழந்தவர்கள் பிதிர்க் கடனும் செலுத்தினர்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)