மருத்துவர் திலிப் லியனகேவைத் தொடர்பு கொள்ளுங்கள்

வடக்கு மாகாணத்துக்கு வெளியே பணியாற்றும் வடக்கு சுகாதார சேவையாளர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் திலிப் லியனகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்,

வடக்கு மாகாணத்தை சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி வருகிறார்கள் அவர்கள் வட மாகாணத்துக்கு இடம்மாற்றம் பெற்று இங்கு பணியாற்ற விரும்புகிறார்கள் என அவர்களது பெற்றோர்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

பிற மாகாணங்களில் தற்போது முதல் நியமனம் பெற்று கடமையாற்றும் வடக்கு மாகாணத்தில் சொந்த இடமாகக் கொண்டுள்ள சுகாதார சேவையாளர்களில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்ற விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், தற்போது கடமையாற்றும் சேவை நிலையம், அது அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தொடர்பு இலக்கம் ஆகிய விபரங்களை 'மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அல்லது 077 784 2861 என்ற வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

மருத்துவர் திலிப் லியனகேவைத் தொடர்பு கொள்ளுங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More