
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவர் அர்ச்சுனா பேராதனைக்கு மாற்றம்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னாள் பதில் மருத்துவ அத்தியட்சகர் இ. அர்ச்சுனா பேராதனை போதனா மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில், நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரியில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தவை வருமாறு,
"யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாக செயல்பட்டேன். அது மருத்துவத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன்.
"எனது குரல்வளையை நசுக்கி எவரும் என்னை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. மக்களுக்கான எனது பணி எப்போதும் தொடரும். சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவின் யாழ்ப்பாண வருகை ஒரு நிகழ்ச்சி நிரலுடன் கூடிய கண்துடைப்பு நாடகம் என்பது மட்டுமல்லாமல் ஏமாற்று வித்தையாகும். பழிவாங்கப்பட்ட நான் மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு பேராதனை மருத்துவமனைக்கு நியமிக்கப்படவுள்ளேன். இங்கிருந்து விடை பெறுகின்றேன். இன்று (நேற்று) கொழும்பு செல்கின்றேன். எல்லாம் முடிவடைந்த பின்னர் மீண்டும் இங்கு வருவேன். மக்களுக்கு நன்றி”, என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)