மன்னாரில் திங்கள் கிழமை (07.02.2022) 26 பேருக்கு கொவிற் தொற்று

மன்னார் மாவட்டத்தில் திங்கள் கிழமை (07.02.2022) 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த மாதம் (பெப்பிரவரி) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதனின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் திங்கள் கிழமை (07.02.2022) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மன்னார் பொது வைத்தியசாலையில் 12 பேருக்கும், விடத்தல்தீவு வைத்தியசாலையில் 6 பேருக்கும், பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் 3 நபர்களுக்கும், மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் வங்காலை வைத்தியசாலையிலும் தலா 2 பேருக்கும், முருங்கன் வைத்தியசாலையில் ஒருவருமே இந் நாளில் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

பெப்பிரவரி மாதம் மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3626 ஆகவும் இறப்பு 37 ஆகவும் உயர்ந்துள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மன்னாரில் திங்கள் கிழமை (07.02.2022) 26 பேருக்கு கொவிற் தொற்று

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More