
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மனோகனேஷனுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை அவர்களுக்கு இடைக்கால தொகையாக 5000+ வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை வரவேற்பதாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
மனோகணேசன், சம்பள பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேடாமல் கருத்து தெரிவித்தது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)