
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள்
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 149 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, கரப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டிகள் மற்றும் பழைய மாணவர்களின் நடனங்கள், தெரு நாடகம் ஆகியனவும் அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.
இதன்போது, பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)