போக்குவரத்து அமைச்சர் யாழ் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்தார்.

கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் சேவையில் நேற்று மதியம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை – கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்துடன், இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம், அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில் சேவை தரித்து நிற்கும் என இந்தச் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் யாழ் விஜயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY