போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கட்டாக்காலி கால்நடைகள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கட்டாக்காலி கால்நடைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் திரியும் கட்டாக்காலி கால்நடைகளால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் சுற்றித்திரியும் இவ்வாறான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் நாளாந்த செயல்பாடுகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது.

பிரதேச செயலங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் பொதுப் போக்குவரத்து பகுதிகளில் இரவு வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் திரிகின்றன. வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளமையால் கட்டாக்காலி மாடுகள், ஆடுகள் பிரதான வீதிகளை ஆக்கிரமித்து சுதந்திரமாக திரிகின்றன.

எனவே, கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றை பிடித்து உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள், ஆடுகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகின்றது. இதனால் வீதியில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

இந்தக் கட்டாக்காலி விலங்குகள், பிரதான வீதிகள் மற்றும் பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.

அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்தி வருவதும், துர்நாற்றம் வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

எனவே, கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கட்டாக்காலி கால்நடைகள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More