பொருட்களின் தட்டுப்பாடு - கொள்ளை  இலாபமீட்டும்  வர்த்தகர்கள்

நாட்டின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வர்த்தகர்கள பலர் விற்பனை செய்யப்படும் பொருட்களில் ஏற்கனவே பொறிக்கப்பட்ட விலைகளுக்கு மேல் புதிய விலைகள் பொறித்து கூடிய இலாபம் பெற்று வருவதாக மஸ்கெலியா சாமிமலை பகுதி மக்கள் வியாழக்கிழமை (26.05.2022) நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கப் பெற்ற செய்தி தெரிவிக்கின்றது.

மஸ்கெலியா பகுதியில் சாமிமலை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யும் பொருட்களில் அந்தந்த நிறுவனங்களில் பொறிக்கபட்ட விலைக்கு மேல் புதிய விலை லேபல் ஒட்டி கொள்ளை இலாபம் ஈட்டுவதாக சாமிமலை பாவனையாளர்கள் கொதித்தெழுந்து வியாழக்கிழமை (26) மதியம் சாமிமலை கவரவிலை சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக சகல பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

ஆகவே இவ் விலையேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொருட்களின் தட்டுப்பாடு - கொள்ளை  இலாபமீட்டும்  வர்த்தகர்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

மேலதிகச் செய்திகள்

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More