பேராசிரியரானார் கலாநிதி க. இராஜேந்திரம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
பேராசிரியரானார் கலாநிதி க. இராஜேந்திரம்

கலாநிதி க. இராஜேந்திரம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட புவியியல் துறையின் முதலாவது புவியியற் பேராசிரியராக கலாநிதி க. இராஜேந்திரம் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் கடந்த வாரம் கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் துணைவேந்தரால் கையளிக்கப்பட்டுள்ளது.

கலாநிதி க. இராஜேந்திரம் மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பாடசாலைக் கல்வியை தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயம், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், மற்றும் பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆகியவற்றில் பயின்றுள்ளார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புக் கற்கையினை மேற்கொண்டு முதன்மை தேர்ச்சி பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். தனது முதுதத்துவமாணிப் பட்டத்தைப் யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்ட இவர், தனது கலாநிதிப் பட்டத்தினைப் இந்தியாவின் புதுடில்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக (தரம் 1) பதினேழு வருடங்கள் பணியாற்றிய இவர் 2008ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராக (தரம் 1) இணைந்து கொண்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறையில் கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி, கலாநிதிக் கற்கைகளுக்கான விரிவுரையாளராகவும், வழிகாட்டியாகவும், பரீட்சகராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் இலங்கை, இந்நிய பல்கைலைக் கழகங்களின் கலாநிதி, முதுதத்துவமாணி ஆய்வுகளுக்கான பரீட்சகராகவும் பணிபுரிந்து வருகின்றார்.

பேராசிரியரானார் கலாநிதி க. இராஜேந்திரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)