புதிதான மதுபானசாலை வேண்டாம் - கோரிக்கை நிராகரிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புதிதான மதுபானசாலை வேண்டாம் - கோரிக்கை நிராகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இன்று (27) இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெல்லிப்பளையில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்க எடுத்த முயற்சிக்கு பொதுமக்களின் எதிர்ப்பு காணப்பட்டமை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் போதுமான அளவு உள்ளன. இனி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மதுபான சாலைகள் எதுவும் புதிதாக தேவையில்லை. புதிய மதுபான சாலைகளுக்குரிய அனுமதியினை வழங்கக் கூடாது என தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தில் தலையிட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற ஒரு நியதி உள்ளது. அதனை பரிசீலித்து தான் தீர்மானிக்க முடியும் என தெரிவித்ததற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 146 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்றும் அதாவது கள்ளுத் தவறணைகளையும் சேர்த்து எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவை தலைவரின் தீர்மானம் கைவிடப்பட்டது.

புதிதான மதுபானசாலை வேண்டாம் - கோரிக்கை நிராகரிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More