
posted 7th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பளை மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இடம்பெற்ற மருத்துவ முகாம்
பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இன்று (07)திகதி காலை 10மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பளை மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டத்திருந்தது.
இம் மருத்துவ முகாமிற்கு வைத்தியர் திரு அருமைத்துரை மற்றும் நிதி பங்காளர் நலன் விரும்பி அன்பு மற்றும் ஆசிரியர் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)