பல மாற்றங்களை உருவாக்கிய பன்முக திறமைகள் கொண்ட பெண்கள்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பல மாற்றங்களை உருவாக்கிய பன்முக திறமைகள் கொண்ட பெண்கள்

இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் முன்பும், பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை முதலாவது இடத்தில் காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பதாகும். ஒரு சிறந்த பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க செயற்பட்டு அவர்களின் ஆட்சியின் போது மக்களுக்காக சிறப்பாக செயற்பட்டு சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார்.பெண்களின் சிறந்த ஒரு தலைமைத்துவத்திற்கு அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

பெருந்தோட்ட பெண்கள் பிரித்தானிய ஆட்சி காலம் முதல் இன்றுவரை இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நம் நாட்டிற்கான அந்நியசெலவாணியை பெருந்தோட்ட பெண்கள் பெற்றுகொடுத்து நம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். வீட்டையும், நாட்டையும் கட்டியெழுப்பும் வலிமை பெண்களுக்கே உண்டு.

பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பல மாற்றங்களை உருவாக்கிய பன்முக திறமைகள் கொண்ட பெண்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More