posted 16th September 2021
வட மாகாண சபையின் குறித்துரைக்கப்பட்டPsdg திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட திட்டங்களின் ஒரு திட்டமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன் தலமையில் நேற்றுக்காலை 11:00 மணிக்கு இடம் பெற்றது.
நாட்கல் நாட்டுவதற்கான கிரியைகளை ஆதார வைத்தியசாலை விநாயகர் ஆலய குரு முதல்வர் சி.இந்திரராஜகுருக்கள் மேற்கொண்டார்.
தொடர்ந்து நாட்கற்களினை மருத்துவ மனை பதில் அத்தியட்சகர் வே.கமலநாதன், நிர்வாக உத்தியோகத்தர் வான்மதி ஜெயதாஸ்,
தாதிய பரிபாலகி குமுதமலர் ரவீந்திரன், மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ மனை உத்தியோகத்தர்கள் என பலரும் நாட்டி வைத்தனர்.
60 மில்லியன் ரூபா செலவில் இத் திட்டம் இடம் பெறவுள்ளமை குறிப்பிட தக்கது.
எஸ் தில்லைநாதன்