பரீட்சை திணைக்கள உயர் பதவிகளில் இன சமத்துவம் பேணப்பட வேண்டும்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பரீட்சை திணைக்கள உயர் பதவிகளில் இன சமத்துவம் பேணப்பட வேண்டும்

இலங்கை பரீட்சை திணைக்களத்தில் பணியாற்ற வேண்டிய கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் பதவி நியமனங்களில் இன சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தின் செயலாளர் ஏ. எல். எம். முக்தார், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் உள்ள நிறைவேற்றுத்தர பதவிகளான பரீட்சை ஆணையாளர் நாயகம், மேலதிக பரீட்சை ஆணையாளர் நாயகம், பிரதிப் பரீட்சை ஆணையாளர், உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் எவரும் நியமிக்கப்படாத குறை நீண்ட காலமாக நிலவி வருகிறது.

பரீட்சை திணைக்களத்தின் தற்போதைய கட்டமைப்பில் தமிழ் மற்றும் சிங்கள அதிகாரிகள் மாத்திரமே மேற்படி பதவிகளில் கடமையாற்றி வருகின்றனர்.

கடந்த காலங்களில் மேலதிக பரீட்சை ஆணையாளர் நாயகம், பிரதிப் பரீட்சை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளில்
முஸ்லிம் அதிகாரிகள் கடமையாற்றி வந்துள்ளனர்.

இறுதியாக ஏ. எஸ். முகமட் என்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரி, பிரதிப் பரீட்சை ஆணையாளராக கடமையாற்றி 2018 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு முஸ்லிம் அதிகாரியும் நியமனம் செய்யப்படவில்லை.

2007 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு நியமனம் செய்யப்பட்ட முஸ்லிம் அதிகாரிகள் ஒருவராவது பரீட்சை
திணைக்களத்துக்கு நியமனம் செய்யப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட தடை செய்யப்பட்டதொரு அரச நிறுவனமாக இலங்கை பரீட்சை திணைக்களம் மாறி உள்ளதா? எனும் சந்தேகம் முஸ்லிம் கல்வியாளர்களால் நோக்கப்படுகிறது.

இந்த நிலையில், பரீட்சை திணைக்களத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த முஸ்லிம் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமது சங்கம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

பரீட்சை திணைக்கள உயர் பதவிகளில் இன சமத்துவம் பேணப்பட வேண்டும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More