படைப்பாற்றல் மேம்பாட்டு கூடல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பாற்றல் மேம்பாட்டு கூடல் நிகழ்வு ஒன்று காரைதீவில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் தலைமையில், காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பிரபல எழுத்தாளர் உமா. வரதராஜன், எழுத்தாளரும், பேஜஸ் புத்தக இல்லத்தின் பணிப்பாளருமான சிராஜ் மஷ்ஹுர் ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்கள் தமது பேனா ஆக்கங்களில் முரண்பாட்டற்ற தன்மையைப் பேணல், பயன்படுத்தும் முறைகள், நுணுக்கங்கள், எழுதுவதிலுள்ள தாற்பரியங்கள் போன்ற தலைப்புக்களில் வளவாளர்களால் விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் இளம் எழுத்தாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி இளம் எழுத்தாளர் கூடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படைப்பாற்றல் மேம்பாட்டு கூடல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY