நிர்வாகத்துக்கான டி. ஐ. ஜியாக லலித் பத்திநாயக்க நியமனம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிர்வாகத்துக்கான டி. ஐ. ஜியாக லலித் பத்திநாயக்க நியமனம்

பொலிஸ் மா அதிபரின் பணிகளை மேற்பார்வை செய்வதற்கு மறு அறிவித்தல்வரை மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு நேற்று வியாழக்கிழமை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

லலித் பத்திநாயக்க தற்போது மத்திய மாகாணங்களின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகிறார். அடுத்து, பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுமிடத்து இவரே முன்னிலையில் இருக்கிறார் என்று கருதப்படுகின்றது.

நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்த மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன உயிர்த்த ஞாயிறு தொடர்பான குண்டுத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடிவடையும் வரை கடந்த ஜூலை 18ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதனிடையே, பொலிஸ் மா அதிபராக செயல்பட தேசபந்து தென்னக்கோனுக்கு கடந்த 24ஆம் திகதி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பதவியில் இல்லாதமை பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே, நிர்வாக கடமைகளை மேற்கொள்ள வசதியாக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

நிர்வாகத்துக்கான டி. ஐ. ஜியாக லலித் பத்திநாயக்க நியமனம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)