நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நாளை 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பிரதேச முக்கியத்துவமிக்க இக்கூட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று இடம்பெறவுள்ளமை தொடர்பில் பிரதேச பொது மக்கள் உட்பட பொது அமைப்புக்களும் பெரு வரவேற்புத்தெரிவித்துள்ளன.

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய தலைவராக ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ள திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் இந்த பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல்லதீபின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெறும்.

கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முக்கிய பிரச்சினைகள் மற்றும் கடந்த கால, நிகழ்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு காத்திரமான தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

தவிரவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப், பொத்துவில், நிந்தவூர், கல்முனை வடக்கு, கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஸ் குனவர்த்தனவிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)