நிந்தவூரின் முதலாவது பெண் நூலகர் ஓய்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிந்தவூரின் முதலாவது பெண் நூலகர் ஓய்வு

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூரின் முதல் பெண் நூலகரான திருமதி யூ.எஸ்.சபீக் அஹமட், தமது முப்பது வருட சேவையை நிறைவு செய்து, ஓய்வு பெற்றுள்ளார்.

நூலக சேவையில் அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் சேவையாற்றி, நூலகங்களின் பயன்பாட்டை பொது மக்களும், குறிப்பாக பாடசாலை மாணவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒழுங்கமைத்து பெரும் பங்களிப்பு செய்த அவர்,
அம்பாறை மாவட்டத்தில் தாம் நூலகராகக் கடமையாற்றிய நூலகங்களின் அபிவிருத்தியிலும், குறித்த நூலகங்கள் மாவட்ட மட்ட, தேசிய மட்ட போட்டிகளில் சாதனைகள் படைக்கவும் பெரும் பங்காற்றி வந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்ற இவர், காரைதீவு பொது நூலகம், நிந்தவூர் அமீர் மேசா ஞாபகர்த்த பொது நூலகம், மற்றும் களுவாஞ்சிக்குடி, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பொது நூலகங்களிலும் கடமையாற்றி அவ்வப்பிரதேச நூலக வாசகர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

தாம் கடமையாற்றிய நூலகங்களில் அங்கத்தவர்களை அதிகரிப்பதிலும், குறித்த நூலகங்களின் பௌதீக வழங்களை மேம்படுத்தி, நூல்களை சேகரிப்பதிலும் இவர் பெரும் பங்காற்றி வந்துள்ளார்.

நிந்தவூர் அமீர்மேர்சா ஞாபகர்த்த பொது நூலகம், இவர் நூலகராகப் பணியாற்றிய 2012, 2016, 2017 காலப்பகுதியில் தேசிய நூலக சபை நடத்திய நூலகங்களுக்கிடையிலான போட்டியில் தேசிய ரீதியிலான விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகம் குறித்த போட்டியில் 2016 இல் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 6ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்ட நிலையில் 2017 இலும் தேசிய ரீதியிலான விருதைப் பெற்று நிந்தவூர் பிரதேச சபைக்கும், நிந்தவூருக்கும் பெருமை சேர்ப்பதற்கு இவரது பெரு முயற்சிகள் காரணமாக அமைந்தது.

நிந்தவூரின் முதல் பெண் நூலகரான திருமதி. யூ.எல்.சபீக் அஹமட் தமது 30 வருட சேவையின் பின் ஓய்வு பெற்றுள்ளமை தொடர்பில் அவர் கடமையாற்றிய பல்வேறு பிரதேச மக்களும் நன்றி பகர்ந்த வண்ணமுள்ளனர்.

நிந்தவூரின் முதலாவது பெண் நூலகர் ஓய்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More