நாட்டின் இன்றைய சூழலில் மன்னார் நிலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான கண்டனப் பேரணி தொடர்பாகவும் மன்னார் மாவட்ட மக்களின் நிலையை தெரிந்து கொள்ளும் நோக்குடன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த தேசிய சமாதான பேரவை நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகன் பெரேரா மற்றும் தேசிய சமாதான பேரவை தலைவரும் சமாதான தொடர்பாடல் பயிற்சி நிலைய பணிப்பாளருமான கலாநிதி ஜோன் வில்லியம் ஆகியோர் மன்னாருக்கு வருகை தந்து நட்பு ரீதியான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்.

23.04.2022 சனிக்கிழமை மன்னாரில் நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், பிரதேச சர்வ சமயக்குழு ஆகியோருடன் உரையாடி மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மன்னார் மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்தள்ளது போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

உள்நாட்டு உயர் மட்டம் மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெறும் நாட்டின் நிலையைப்பற்றி உரையாடும்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களின் நிலைபாடுகளை முன்வைக்கும்போது மன்னாரின் நிலையையும் எடுத்துரைக்கும் நோக்கம் கொண்டே இக் கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இன்றைய சூழலில் மன்னார் நிலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More