posted 24th October 2021
நல்லூர் சைவத் தமிழ் பண்பாட்டு கலைக்கூடத்தினரின் ஏற்பாட்டில் 92 ஆவது அகவையில் காலமாகிய நல்லூர் ஆலயத்தில் பத்தாவது நிர்வாகியான குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனை வித்துக்கள் செம்மணி வீதியிலுள்ள நல்லூர் ஆலய வரவேற்பு நுழைவாயில் பகுதியில் இன்றைய தினம் (24.10.2021) நாட்டி வைக்கப்பட்டது.
பனை மர வித்து நாட்டும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர், நல்லூர் பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர், ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பான கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் முகமாக நல்லூர் வரவேற்கிறது வளைவிற்கு அண்மையில் வீதியின் இரு மருங்கிலும் யாழ்ப்பாண கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் முகமாக வீதியின் இரு மருங்கிலும் பனை வித்து நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
எஸ் தில்லைநாதன்