
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தேர்தலில் சுயேச்சையாக களமிறங்குகிறார் ரணில்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (25) வர்த்தமானி மூலம் அறிவித்தது.
நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து முதல் நபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணத்தை செலுத்தினார். அவர் சுயேச்சையாக போட்டியிடவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் அவரின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)