தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு நூல்கள் வெளியீடு

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு நூல்கள் வெளியீடு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் இரு முக்கிய நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில், எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக ஒலுவில் வளாக, கலை, கலாச்சார பீடகலையரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் “ஸிஹாஹ்ஸித்தா”ஹதீஸ் கிரந்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுதி நூல் அறிமுகமும் “மீஷ்காத்துல் மஹாபீஹ்” தமிழ் நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளன.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தமிழ் நாடு ரஹ்மத் பதிப்பகம் நடத்தும் மேற்படி முக்கிய நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வுபல்கலைக்கழக கலை, கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.

நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரின் தலைமை உரையினைத் தொடர்ந்து,

இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட பேராசிரியர் அஷ்ஷெய்ஹ் எஸ்.எம்.எம். மஸாஹிர், சென்னை மந்தை வெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூத் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர் முஹம்மது பாகவி மனித நேய ஜனநாயகக் கட்சி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். தமீமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.

மேலும், நூல்களின் சிறப்புப் பிரதிகளை நிகழ்வில் தமிழ்நாடு ரஹ்மத் பதிப்ப நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா , பல்கலைக்கழக உபவேந்தர், இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடபீடாதிபதி, நூலகர் உட்பட முக்கியஸ்தர்களுக்கும் வழங்கி வைப்பார்.

நிகழ்வுக்கான சிறப்பு ஏற்பாடுகளை நெறிப்படுத்தியுள்ள பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நன்றியுரை பகர்வதுடன், சர்வதேசப்புகழ் ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் நிகழ்வுகளை நெறிப்படுத்தியும் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு நூல்கள் வெளியீடு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More