தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 100 வருட வரலாறு கொண்டது. அக்கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த காணி பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.

சண்முகா மகளிர் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த பத்து வருடங்களாக காணிப் பிரச்சினை நிலவி வருகிறது. இதுதொடர்பில் கடந்தகாலங்களில் பாடசாலை நிர்வாகம் பல தரப்பினரிடம் தீர்வை பெற்றுக்கொள்ள முற்பட்டுள்ள போதிலும் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இதற்கு 30 வருட குத்தகைக்கு புதிய காணியை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 30 வருடத்துக்கான குத்தகை தொகையையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

கிழக்கு ஆளுநரின் இந்த செயல்பாட்டை வரவேற்றுள்ள பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பாடசாலைக்கு காணி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்த பாடசாலையில் நீண்டகாலமாக காணிப்பிரசினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை எனவும், பாடசாலைகளுக்கான காணியை உடனடியாக பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழரசு கட்சியின் செயலாளர் குகதாசன் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வினை வழங்கினேன் என செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தீர்வை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More