திலீபன் நினைவு ஊர்தி மீது பேரினவாத குழு தாக்குதல்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

திலீபன் நினைவு ஊர்தி மீது பேரினவாத குழு தாக்குதல்

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியை திருகோணமலையில் வழிமறித்த பேரினவாதக் குழு அதனை அடித்து நொறுக்கியது. அத்துடன், அதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது கொடூரமான தாக்குதலையும் நடத்தியது.

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்தது.

தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து வடக்கு நோக்கி பயணித்தது. இந்நிலையில், நினைவு ஊர்தி நேற்று முன்தினம் திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திருகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

சர்தாபுர பகுதியில் பேரினவாதிகள் கற்களை நடுவீதியில் போட்டு வீதியை வழிமறித்திருந்தனர். அந்த பகுதியில் பொலிஸார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் நின்றிருந்தனர். எனினும், அவர்கள் தாக்குதலை தடுக்கவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றஞ்சாட்டினர்.

முதலில் முகத்தை கறுப்புத்துணியால் மறைத்து கட்டியிருந்த நபர் ஒருவர் கல் ஒன்றை வீசி ஊர்தியை தாக்கினார். தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த பேரினவாதக் கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, கொட்டன்களால் அடித்து தாக்கினர். வாகனத்தில் இருந்தவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி என். காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்த ஊர்திப் பவனிக்கு நேற்று முன்தினமும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஒரு குழுவினர் மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு அருகாமையில் நின்று சிங்க கொடிகளை ஏந்தியவாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனைக் கடந்து சென்றபோது வாழைச்சேனை சந்திக்கு அண்மையில் நின்ற ஒரு குழுவினர் பதாதைகளை தாங்கியவாறு மாலை 6.30 மணியளவில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்த இடத்தைக் கடந்து ஊர்தி பயணித்துக் கொண்டிருந்தபோது அதே குழுவினர் பட்டா ரக வாகனத்தில் ஏறி ஊர்தியை முந்திச் சென்று நாவலடியிலுள்ள பொலநறுவை-வாகரை – மட்டக்கப்பு சந்தியில் இறங்கி வீதிக்குக் குறுக்காக பதாதைகளை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீபன் நினைவு ஊர்தி மீது பேரினவாத குழு தாக்குதல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More