
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் போதைபொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இடம்பெற்ற போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், கிழக்கு மாகாண மட்ட மேசை பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இரு நிகழ்வுகளுக்கும் வருகை தந்திருந்த பிரதம அதிதிகளை கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிரோஷா வரவேற்றார்.
இரு நிகழ்வுகளும் கல்லூரியின் இரு நுழைவாயில்களினூடாக வெவ்வேறாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)