
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தரம் 3 மாணவர்களால் மாதிரி சந்தை நிகழ்வு
அம்பாறை, அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் ஆரம்பப் பிரிவு தரம் - 03 மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாதிரிச் சந்தை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்றது. அதிபர் எம். ஐ. எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாணவர் சந்தை வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாணவர்களின் கணித மற்றும் தமிழ் அறிவை மேம்படுத்துவதுடன் சமூகத் தொடர்பாடல் விருத்தி, வியாபார நடைமுறைகள், சுகாதார பழக்க வழக்கங்கள், நட்புறவுச் செயல்பாடுகள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களை முன்னுரிமை அடிப்படையில் அணுகுதல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்மூலம் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.
இதில், சிறுவர்கள் மகிழ்வுடன் தமது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், பாடசாலையின் ஏனைய மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இந்தச் சந்தையில் பல்வேறு பொருட்களைக் கொள்வனவு செய்தனர். குறித்த மாதிரிச் சந்தைச் செயல்பாடானது மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் செயல்பாடாய் அமைந்தது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)