தடங்கள் நூல் வெளியீடு!

பேராசிரியர் செ. யோகராசா எழுதிய 'ஈழத்து நவீன இலக்கியங்கள்- படைப்பாளர்கள்- தடங்கள் நூல் வெளியீடு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, கலாநிதி ஜீ. கென்னடி, கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச. நவநீதன், வைத்திய கலாநிதி கு. முரளீஸ்வரன், எழுத்தாளர் மண்டூர் அசோகா, எழுத்தாளர் த. மலர்ச்செல்வன், எழுத்தாளர் ச. மணிசேகரன் ஆகியோர் உட்பட பல எழுத்தாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றப்பட்டு, வரவேற்புரை, தலைமையுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது நூலின் முதல் பிரதியினை நூலாசிரியரிடமிருந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புலவர் வி. றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும் பேராசிரியர் செ. யோகராசாவால் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு வெளியிட்டு வைக்கப்பட்ட நூலுக்கான வெளியீட்டுரையினை நிகழ்த்திய கவிஞர் த. மேகராசா தெரிவித்ததாவது;

மட்டக்களப்பில் மட்டுமன்றி இலங்கை எங்கணும் வெளியிடப்பட்ட பல்வேறு நூல்களுக்கான ஆய்வுரைகளை எழுதி அந்நூல்களின் தரத்தினை மேலும் சிறப்புப் பெற வழிசெய்த ஒருவராக எமது பேராசிரியர் செ. யோகராசா திகழ்கிறார். இந்த வகையில் எழுத்தாளர்களை எழுதத் தூண்டி, அவர்களை உன்னத நிலையடையச் செய்த பெருமையும் இவருக்குண்டு என்றார்.

தடங்கள் நூல் வெளியீடு!

ஏ.எல்.எம்.சலீம்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More