
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தங்கப் பதக்கம் வென்ற மாணவனுக்கு வரவேற்பு
தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி மாணவனுக்கு கல்விச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.
தங்கப் பதக்கம் வென்ற மாணவன் எஸ். டிரெஸ்மன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர், ஆசிரியர் சிவதீபன் ஆகியோருக்கு கல்விச் சமூகம் இவ்வாறு வரவேற்பளித்து கெளரவித்தது.
கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)