ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலும் தொடர்கிறது முஸ்லிம் விரோதம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலும் தொடர்கிறது முஸ்லிம் விரோதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்து வருகிறது என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் மாற்றத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 அமைச்சுகளின் செயலாளர்களுள் இருவர் முஸ்லிம்களாகவும் இருவர் தமிழராகவும் ஒருவர் சிங்களவராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். கிழக்கு மாகாண இனச் சமநிலையை கருத்தில் கொண்டு இந்த நியமனம் நடந்தது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் நியமனத்தில் தகுதியுள்ளோர் இருந்தும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஓரங்கட்டப்பட்டனர். 2 முஸ்லிம் செயலாளர்கள் பணியாற்ற வேண்டிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் மாத்திரம் ஒரு முஸ்லிம் உத்தியோகத்தர் செயலாளராகப் பணியாற்றினார்.

சமீபத்தில் அவரும் காரணமேதுமின்றி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். தற்போது கிழக்கு மாகாணத்தின் 5 அமைச்சுகளின் எந்த ஓர் அமைச்சிலும் முஸ்லிம் செயலாளர் இல்லை.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொதுச்சேவை ஆணைக்குழு, வீடமைப்பு அதிகார சபை, சுற்றுலா அதிகார சபை, போக்குவரத்து அதிகார சபை, முன்பள்ளிப் பணியகம், கூட்டுறவு ஆணைக்குழு ஆகியவற்றின் தவிசாளர்களுள் சிலவற்றுக்கு முஸ்லிம் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இவற்றில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளர்களும் நியமிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டனர். இது குறித்து ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

தற்போது அந்த வரிசையில் அமைச்சு செயலாளர்கள் பதவியிலிருந்தும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அகற்றப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் விரோதப் போக்குடன் செயற்பட்டு வருகின்றது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் கிழக்கு மாகாணமாகும் இந்த மாகாணத்திலேயே முஸ்லிம்களுக்கு இந்த நிலையென்றால் ஏனைய மாகாண முஸ்லிம்களும் இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பதவியில் நீடித்து இருப்பாராயின் சகல முஸ்லிம்களும் ஓரங்கட்டப்பட்டு விடுவர் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது என்றார்.

ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலும் தொடர்கிறது முஸ்லிம் விரோதம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More