ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் - 1 112 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் - 1 112 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100000 மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 6000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைபெறும் அம்பாறை மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அரங்கத்தில் நேற்று முன் தினம் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது.

இதற்கமைய காலை ஒரு அமர்வு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் தலைமையிலும் நண்பகல் மற்றுமொரு அமர்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையிலும் இரு பிரிவுகளாக சிறப்பாக நடைபெற்றன.

அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்முனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கொவில், கல்வி வலயத்திற்குட்பட்ட பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 872 தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 240 பேருக்கும் அதிதிகளினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் - 1 112 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)