செம்பியன்பற்று  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழா

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை 06/08/2024 காலை 8 மணி முதல் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் சு. தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், கூட்டுறவு ஆணையாளருமாகிய ந. திருலிங்கநாதன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக பழைய மாணவனும் பாடசாலை பரிசளிப்பு விழாவின் அனுசரணையாளருமான க. இராஜரட்ணம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காலை 8 மணியளவில். மாணவர்களின் நடை பவனியும் அதனை தொடர்ந்து சைக்கிள் பவனியும், பழைய மாணவர்களின் வாகன பேரணிகளும் இடம்பெற்றது. பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த பவனி மாமுனைச் சந்தியை அடைந்து அங்கிருந்து மாமுனை கடற்கரைக்கு சென்று. கடற்கரையிலருந்து தாளையடி கடற்கரை சென்று அங்கிருந்து மருதங்கேணி சந்திக்கு சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

செம்பியன்பற்று  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More