சுமந்திரன், சிறீதரனை வெறுங்கையுடன் ஜனாதிபதி அனுப்ப நான்தான் காரணம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுமந்திரன், சிறீதரனை வெறுங்கையுடன் ஜனாதிபதி அனுப்ப நான்தான் காரணம்

சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ்க் கட்சி எம். பிக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப நான்தான் காரணம் என்று சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான எச். எம். எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எதிர்காலச் சந்ததிகளையும், இந்த மண்ணின் மக்களையும் நாங்கள் அடிமையாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது மார்க்கத்தை இழக்க முடியாது. எமது மைதானத்தை இழக்க முடியாது. ஏன் இந்த கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் உரிமையை இழக்க முடியாது. உரிமைகளை உடைமைகளை பறிகொடுக்க முடியாது என்பதற்காக எனது தலையை அடைமானம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றேன் என்றும் ஹரீஸ் கூறினார்.

கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ரணிலை பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்கின்ற தேர்தலில் கூட தமிழ்க் கட்சிகள் சேர்ந்து டளஸ் அழகப் பெருமவுடன் ஒப்பந்தம் புரிந்தது. அந்த அளவுக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , தமிழர் ஐக்கிய முன்னணி, சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற எல்லோரும் கல்முனை பிரச்சினையை முன்னிறுத்தி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இங்கு மாதக் கணக்கில் போராட்டம் நடைபெற்ற போதும் கல்முனை நகரை தமிழர்கள் முற்றுகையிட்ட போதும் எஸ். சிறீதரனும், இரா. சாணக்கியனும், எம். ஏ. சுமந்திரனும், செ. கஜேந்திரனும் வந்து எமது மண்ணை துண்டாடுவதற்கு முற்பட்டனர்.

அதேநேரத்தில் பாராளுமன்றத்தில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சென்று கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கடற்கரை பள்ளிவாசல் வீதியால் பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரித்துத் தர வேண்டும் என்று கோரிய போது ஜனாதிபதி சொன்ன விடயம் என்னவென்று தெரியுமா? இதை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுடன் பேச வேண்டும். அவருடன் பேசாமல் எந்த உத்தரவாதத்தையும் உங்களுக்கு தரமுடியாது என்று. கல்முனை உப பிரதேச செயலகத்தில் நிதி பிரிவை தரவேண்டும், கணக்காளரை நியமிக்க வேண்டும் என்ற போது கூட அதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி ரணில் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதன் காரணமாக இந்த மண்ணில் மாதக்கணக்கில் போராட்டம் நடக்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஆட்சிக்கு வந்தபோது தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை அவருக்கு வழங்கியதால் உரிமையோடு சென்று அவர்களின் தேவைகளை கேட்டார்கள். கிழக்கு முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராக வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி நீங்கள் கல்முனை நகரத்தை துண்டாடித்தாருங்கள். நாங்கள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் வாக்குகளை தருகிறோம் என்று கருணாவும், பிள்ளையானும், வியாழேந்திரனும் கூறிய போது இந்த மண்ணின் உரிமை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

அந்த காலகட்டம் எனக்கு பெரும் சவாலான காலகட்டமாக இருந்தது. நமது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இருக்கின்றோம். அவர்கள் எல்லாம் ஆளுங்கட்சியில் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆளுங்கட்சியில் அதாஉல்லா, முஷாரப் போன்றவர்கள் செல்வாக்கற்ற வெறும் எம்.பிக்களாக மௌனமாக வாய்மூடி இருந்து கொண்டிருந்தார்கள். யார் இந்த பிரச்சினையை கோத்தா அரசுடன் பேசி முஸ்லிம்களின் நிலங்களை காப்பாற்றுவது என்று இருக்கின்ற போது. அந்த நேரத்தில் நாங்கள் அவர்களோடு பேசாவிட்டால் கல்முனை பறிபோய்விடும். பறிபோனால் மீண்டும் கிடைக்காது என்ற நிலையை உணர்ந்து அவர்களுடன் பேச சென்றோம் என்றார்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சுமந்திரன், சிறீதரனை வெறுங்கையுடன் ஜனாதிபதி அனுப்ப நான்தான் காரணம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)