
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுத்தைகளின் நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் அச்சம்
புத்தல - கதிர்காமம் வீதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சிறுத்தைகள் பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன.
எனவே, புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகவும், உணவுத் தேவைக்காகவும் இந்த சிறுத்தைகள் இவ்வாறு வீதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)