
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சர்வதேச மல்யுத்த போட்டியில் மட்டு. மாணவன் ஹரி பிரஷாத்
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச மட்டத்திலான ஆசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி மாணவன் ஹரிபிரஷாத் மற்றும் பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் ஆகியோர் தாய்லாந்து பயணமாகியுள்ளனர்.
இவர்கள் இருவரையும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு இலங்கையிலிருந்து செல்லும் ஒரோயொரு தமிழ் மாணவன் ஹரிபிரஷாத் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)