கொரொனா தொற்றலும் குணமும் மரணமும் அப்டேற் (12.11.2021)

இலங்கை நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12.11.2021) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,950 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 548,592 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 333 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,122 ஆக அதிகரித்துள்ளது.
.

கொரொனா தொற்றலும் குணமும் மரணமும் அப்டேற் (12.11.2021)

எஸ் தில்லைநாதன்

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More