கொட்டித் தீர்த்தது மழை

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கொட்டித் தீர்த்தது மழை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் தொடரும் மழை, மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக இந்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.

தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்கள் ஒவ்வொரு வருடமும் மழையினாலும் அதனால் ஏற்படும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில வேளை இம்மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்படுகிறது.

இப்பகுதிகளில் வசிக்கின்ற சில மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஒழுங்கான வீடமைப்பு வசதிகளும் இல்லை.

ஒழுங்கான வீதி கிடையாது மின்சார வசதி இல்லை. நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல கஸ்டப்படுகின்றனர்.தொழில் செய்வது சிரமமாக உள்ளது. இது தான் அந்த மக்களின் நிலையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.

தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.

கொட்டித் தீர்த்தது மழை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More