Tamil News | Thaenaaram | Obituary Notices | Thaenaaram | Advertisements | Thaenaaram | Medical Articles |

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பொ.டி. மலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச் சொலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.க. சச்சிதானந்த குருக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே. முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

தமிழர் போற்றும் தைத்திருநாள் நிகழ்வில் வில்லுப்பாட்டு, பக்தி நடனம், குருத்துப்பின்னுதல், கிராமிய பாடல்கள், சிறப்பு பட்டிமன்றம் போன்ற கலை, கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இதன் போது இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந. சத்தியானந்தி, கலாநிதி முருகு தயாநிதி என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபளிக்கும் பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இப்பிரதேசத்தில் கல்வியில் தேசிய மட்டத்தில் பெறுபேறுகளை பெற்று பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Thaenaaram | Advertisements | Thaenaaram | Medical Articles |

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)