குடும்பஸ்தர்  வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை அந்தப்பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.

குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் வயது 30 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குடும்பஸ்தர்  வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More