கிழக்கில் நிறைவேறிய சுனாமி நினைவேந்தல்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கில் நிறைவேறிய சுனாமி நினைவேந்தல்

சுனாமி ஏற்பட்ட 19ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் கிழக்கிலங்கையின் பல்வேறு தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலும் உணர்வெழுச்சி பூர்வமாக இடம்பெற்றன.

தமிழ்ப் பிரதேசங்களில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டோர் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் உறவுகள் கதறி அழுது, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

முஸ்லிம் பிரதேசங்களில் சுனாமி ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட மையவாடி வளாகங்களிலும், பள்ளிவாசல்களிலும் கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், விசேட துஆ பிரார்த்தனை மற்றும் கந்தூரி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிந்தவூர் கடற்கரை பிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளிவாசலில் பேஷ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி) தலைமையில் விசேட துஆ பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கல் நிகழ்வு மற்றும் அன்னதானம் வழங்கல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றதுடன், சுனாமி ஞாபகர்த்த நினைவுப் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் நிறைவேறிய சுனாமி நினைவேந்தல்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)