
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்ச்செய்கை விவசாயிகளுக்கு மானியம்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா. தேவரதன் தெரிவித்துள்ளார்.
ஒன்பது கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு 7272.35 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு 109,085,227.50ரூபா இதுவரை வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு படிப்படியாக வங்கிக் கணக்குகளில் இடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகள் தமது வங்கி கணக்குகள் ஊடாக தமது பணத்தினை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)