
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு
கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனை அறிவகத்தில் இன்று (23) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, எழுத்தாளரும் ஆசிரியருமான தீபச்செல்வன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
கட்சியின் உறுப்பினர்கள் பலரது பங்கேற்புடன் நடைபெற்ற இந் நினைவேந்தலின் போது, அண்மையில் மறைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தமிழீழ இராணுவ இயக்கத்தின் தலைவரும், ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவருமான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)