காலத்தின் தேவை - செல்லையா. பேரின்பராசா

உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளன.இத்தகைய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்கள் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் ஆங்கில பாடத்திலும்.கணிணியிலும் அறிவைப் பெருக்கிக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறு கமு/கமு/துரைவந்தியமேடு அ. த. க. பாடசாலை அதிபரும். சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா. பேரின்பராசா குறிப்பிட்டார்.

வடக்கு.கிழக்கு.மற்றும் மலையகம் போன்ற இடங்களில் பல்வேறுபட்ட சமூக நலப்பணியாற்றிவரும் "தமிழ் ஒப் லங்கா உழைக்கும் கரங்கள்" அமைப்பின் ஏற்பாட்டில் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆங்கில பாட இலவச கல்விக் கருத்தரங்கு இவ் வித்தியாலய அதிபர் தி. ஈஸ்வரன் தலைமையில் 16.05.2022 ஆந் திகதி இடம்பெற்றது.பிரபல ஆங்கில பாட ஆசிரியர்களான ஆ.ரவிச்சந்திரன். திருமதி. விமலா.ரவிச்சந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
"தமிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள்" அமைப்பின் தலைவர் எஸ். இளந்தீபன். இவ் அமைப்பின் சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளர் த.கலாதரன் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் கமு/கமு/துரைவந்தியமேடு அ. த. க. பாடசாலை அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா. பேரின்பராசா அங்கு மேலும் பேசுகையில்......

அன்று நாங்கள் இப் பாடசாலையில் மாணவர்களாக இருந்த போது எமக்கு ஆங்கிலம். கணிதம். விஞ்ஞானம். அழகியல் போன்ற பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இருக்கவில்லை. இருக்கவில்லை.

இன்று போதியளவு ஆசிரிய ஆளணி உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதே வேளை மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் காட்டுகின்ற அக்கறையை ஒழுக்க நிலைகளிலும் காண்பிக்க வேண்டும். ஒரு மனிதனிடம் ஒழுக்கம் இல்லையேல் அவன் பெற்ற கல்வி பயனற்றதாகிவிடும்.

இன்றைய நிகழ்வின் வளவாளர்கள் தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் பணியாற்றி அங்குள்ள பெற்றோரின் நன்மதிப்பை பெற்றவர்கள்.அந்த வகையில் நீங்கள் பாக்கியசாலிகள் என்றார். இக் கருத்தரங்கில் பங்குபற்றிய சகல மாணவர்களுக்கும் பரீட்சை எதிர்பார்ப்பு வினா விடைக் கொத்து வழங்கப்பட்டது இந் நிகழ்வில் பிரதி அதிபர் இ. லிங்கநாதன் நன்றியரையாற்றினார்.

காலத்தின் தேவை - செல்லையா. பேரின்பராசா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House