காசு கொடுத்துதவிய பெண்ணுக்கு நடந்தது என்ன?

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் என்று சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம், பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணம் கொடுக்கலில் ஈடுபட்டு வருபவர் எனவும், குடும்பம் ஒன்றுக்கு கொடுத்த 3 இலட்ச ரூபா பணம் வாங்க சென்றபோதே காணாமல் போயிருந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில், மணியந்தோட்டம் பகுதியில் குறித்த பெண்ணிடம் பணம் வாங்கிய குடும்பத்தினரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பணம் வாங்கிய குடும்பத்தினர், அப்பெண்ணை கொலை செய்து, அவர்களது வீட்டுக்கு பின்னால் புதைத்துள்ளதாகவும், அவரது மோட்டார் சைக்கிளையும் புதைத்துள்ளனர் எனும் சந்தேகந்தில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த வீட்டில் வசித்து வந்த கணவன் மனைவி மற்றும் அவர்களுக்கு உதவிய குற்றத்தில் ஒருவருமாக மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காசு கொடுத்துதவிய பெண்ணுக்கு நடந்தது என்ன?

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More