
posted 30th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபையின் புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் நிகழ்வு
கல்முனை மாநகர சபையில் புதிதாக நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்களுடனான சந்திப்பு மற்றும் முதல்மாத சம்பளம் வழங்கும் நிகழ்வு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் மருதமுனை பொது நூலக சமூக வள நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், நிதி உதவியாளர் யூ.எம். இஸ்ஹாக், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.பாஸித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்முனை மாநகர சபையில் தற்காலிக, ஒப்பந்த, அமைய அடிப்படையில் பல வருடங்களாக கடமையாற்றி வந்த 102 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களுள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட 99 ஊழியர்களுக்கான முதல் மாத சம்பளம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இதற்காக கல்முனை மாநகர சபையின் சொந்த நிதியில் இருந்து சுமார் 49 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர், கணக்காளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோர் தமது உரைகளின்போது புதிய ஊழியர்களுக்கான வரப்பிரசாதங்கள், கட்டுப்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை எடுத்துரைத்து, அவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)