கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ விட‌ய‌த்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் என‌ கௌர‌வ‌ பிர‌த‌ம‌ரும், உள்ளூராட்சி, மாகாண‌ ச‌பைக‌ள் அமைச்ச‌ர் தினேஷ் குண‌வ‌ர்த்த‌ன‌வுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வியால் க‌டித‌ம் அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
அதில் குறிப்பிட்டுள்ள‌தாவ‌து;

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தின் கீழ் இய‌ங்க‌க் கூடிய‌ வ‌கையில் உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் 1989ம் ஆண்டு உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இது ஒரு த‌னியான‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் அல்ல‌. க‌ல்முனை செய‌ல‌க‌த்தின் கீழ் இய‌ங்கும் உப‌ செய‌ல‌க‌மாகும்.

ஆனால், யுத்த‌ கால‌த்தில் ஆயுத‌ முனையில் இந்த‌ உப‌ செய‌ல‌க‌ம் த‌மிழ் செய‌ல‌க‌மாக‌ சுய‌மாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்கான‌ வ‌ர்த்த‌மானி அறிவித்த‌ல் எதுவும் இருக்க‌வில்லை.

உப‌ செய‌ல‌க‌ம் என்ற‌ பெய‌ர் க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம் என்றும், க‌ல்முனை த‌மிழ் வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்றும் சில‌ரால் அழைக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வாறு அழைப்ப‌த‌ற்கான‌ எந்த‌வொரு அர‌ச‌ வ‌ர்த்த‌மானி அறிவித்த‌லும் வெளியிட‌ப்ப‌ட‌வில்லை.

மேலும், 1993.09.03ஆம் திகதி கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்ததாகவும் அதையும் அரசியல்வாதிகள் தடுத்ததாக தமிழர் தரப்பில் உண்மைக்குப் புறம்பாக கூறப்படுகின்றது.

1993.09.03ல் 28 உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில்27 வது இடத்தில் க‌ல்முனை (த‌மிழ் பிரிவு) உப‌ செய‌ல‌க‌ம் என அரசியலமைப்புக்கு மாற்றமாக‌ இனரீதியான பெயரும், நிர்ணயம் செய்யப்பட்ட எல்லையும் இல்லாததால் இது அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது. ஏனைய 27 உப பிரதேச செயலகங்களும், பிரதேச செயலகங்களாக அங்கிகரிக்கப்பட்டன. இதை விளங்காமல் முஸ்லிம்கள் மீது பழி போடுவது அறிவீனமாகும்.

அன்றைய‌ அர‌சாங்க‌ங்க‌ளுக்கு யுத்த‌மே பெரிய‌ விச‌ய‌மாக‌ இருந்த‌தால் இவ்வாறு சுய‌மாக‌ பெய‌ர் கூற‌ப்ப‌டுவ‌தை பெரிதாக‌ அர‌சாங்க‌ம் எடுத்துக்கொள்ள‌வில்லை. யுத்த‌ம் முடிந்த‌தும் சிங்க‌ள‌ அர‌சுட‌ன் சான்டை பிடித்து தோற்ற‌ சில‌ இன‌வாத‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும், த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றி அர‌சிய‌ல் செய்யும் த‌மிழ் இன‌வாத‌ க‌ட்சிக‌ளுக்கும் யாராவ‌து புதிய‌ எதிரி தேவைப்ப‌ட்ட‌து. அத்த‌கைய‌ எதிரிக‌ளாக‌ க‌ல்முனை முஸ்லிம்க‌ள் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு க‌ட‌ந்த‌ ந‌ல்லாட்சிக் கால‌த்தில் இது விட‌ய‌ம் பெரிதாக்க‌ப்ப‌ட்டு ஒற்றுமையாக‌ வாழும் க‌ல்முனைத் தொகுதி முஸ்லிம், த‌மிழ் ம‌க்க‌ளுக்கிடையில் இன‌ முறுக‌ல் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன் மூல‌ம் க‌ல்முனையை குழ‌ப்பி இங்கு முஸ்லிம், த‌மிழ் முறுக‌லை ஏற்ப‌டுத்த‌ முய‌ற்சிக்கும் இன‌வாதிக‌ளின் தூண்டுத‌லே இந்த‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினை என்ப‌து தெளிவாகிற‌து.

இப்போது நாடு ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையில் பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ மீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் நாட்டை குழ‌ப்புவ‌த‌ற்காக‌ த‌மிழ் இன‌வாத அர‌சிய‌ல்வாதிக‌ள் மீண்டும் இப்பிர‌ச்சினையை தூக்கி பொய்க‌ளை பேசுகின்ற‌ன‌ர்.

இந்த‌ ச‌ட்ட‌த்துக்கு முர‌ணான‌ உப‌ செய‌ல‌க‌த்துக்கு எதிராக‌ நீதி ம‌ன்ற‌த்தில் ந‌சீர் என்ப‌வ‌ரால் வ‌ழ‌க்கும் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

க‌ல்முனையில் முஸ்லிம்க‌ள் 70 வீத‌மும் த‌மிழ‌ர்க‌ள் 30 வீத‌மும் உள்ள‌ன‌ர். ஆனாலும் 70 வீத‌ முஸ்லிம்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவும், 30 வீத‌ த‌மிழ‌ர்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ அநியாய‌ம் ந‌ட‌ந்தேறியுள்ள‌து.

க‌ல்முனையை இன‌ரீதியாக‌ பிரிக்க‌ கூடாது என்ப‌தே எம‌து க‌ட்சியின் கோரிக்கையாகும். க‌ல்முனை ஸாஹிரா முத‌ல் தாள‌வெட்டுவான் வ‌ரையுள்ள‌ க‌ல்முனை செய‌லக‌த்தை இன‌ரீதியில் பிரிக்க‌ கூடாது.

ஆனால், க‌ல்முனை தொகுதியில் 99 வீத‌ம் த‌மிழ‌ர்க‌ள் வாழும் பாண்டிருப்பு, சேனைக் குடியிருப்பை இணைத்து "பாண்டிருப்பு செய‌ல‌க‌ம்" வ‌ழ‌ங்க‌ முடியும் என்ப‌தே எம‌து க‌ட்சி முன் வைக்கும் தீர்வாகும். இந்த‌த் தீர்வை த‌மிழ் த‌ர‌ப்பு ஏற்று க‌ல்முனையை இன‌, ம‌த‌ ரீதியில் பிரிக்காம‌ல் பாண்டிருப்பு என்ற‌ பிர‌தேச‌ ரீதியில் பிரித்து த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் ஒரு செய‌ல‌க‌ம் கிடைக்க‌ப்பெற்று த‌மிழ், முஸ்லிம் ஒற்றுமையை வ‌லுப்ப‌டுத்த‌ முடியும்.

ஆக‌வே, இது விட‌ய‌த்தில் தாங்க‌ள் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்காம‌ல் இது ச‌ம்ப‌ந்த‌மான‌ நியாய‌மான‌ பேச்சுவார்த்தைக‌ளுக்கு எம‌து க‌ட்சியும் அழைக்க‌ப்ப‌ட்டால் அதில் நாம் இது ப‌ற்றி தெளிவு ப‌டுத்த‌ முடியும்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 18.05.2026

Read More
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 18.05.2026

Read More
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 16.05.2026

Read More
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் விவகாரத்தில் அவ‌ச‌ர‌ முடிவு எடுக்க வேண்டாம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 15.05.2026

Read More