கல்முனையில் ஹெரோயின் முகவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்முனைப் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்யும் முகவர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது கல்முனைக்குடி உள்ளூர் வீதியொன்றில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இவரிடம் ஹெரோயின் போதைப்பொருள் 7.870 கிராம், மற்றும் கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சந்தேக நபர் கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான முகவராக செயற்பட்டு வந்துள்ளார் என தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கல்முனையில் ஹெரோயின் முகவர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY