
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கறுப்பு ஜூலை நினைவாக மட்டக்களப்பில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனவீர்ப்புப் போராட்டம் புதன்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.
கறுப்பு ஜூலை 41ஆவது ஆண்டு நினைவாக இந்த கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கையில் ஒப்படைத்த எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் எனக்கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)