கனடா தம்பதியினருக்கு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கனடா தம்பதியினருக்கு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்

கனடாவில் இருந்து அனலைதீவு வந்த தம்பதிமீது நடத்தப்பட்ட தாக்குதலும் கொள்ளையும் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களாலேயே நடத்தப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களை கூலிக்கு அமர்த்தினார் என்று கூறப்படும் பிரதான சந்தேகநபரான பெண் ஒருவரும் கடந்த புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டார்.

அனலைதீவை சேர்ந்த கனடாவில் வசிக்கும் தம்பதியர் கடந்த ஆண்டு விடுமுறைக்காக அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்களின்மீது கடந்த ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது. இதன்போது, அவர்களிடமிருந்த வெளிநாட்டு பணம், நகை மற்றும் பெறுமதியான பொருட்கள், கடவுச்சீட்டுகள் என்பவை கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட பெண் ஒருவரே பணம் கொடுத்தார் என்று தெரிய வந்தது. தொடர்ந்த விசாரணையில் கடந்த புதன்கிழமை பிரதான சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கனடாவை சேர்ந்த ஒருவரே தனக்கு பணம் அனுப்பி இந்த சம்பவத்தை செய்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தப் பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, கைதான பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை, மோசடி வழக்குகள் சிலவும் பதிவாகி உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.


எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

கனடா தம்பதியினருக்கு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)